யாழில் - 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு!!

  

Tamil lk News

யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப் பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று (07) அதிகாலை உயிரிழந்துள்ளார். 


கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி என்ற 45 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டுள்ளார்.


கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.

சிகிச்சை 

குழந்தையை பிரசவித்த பின்னரான  32 நாட்களில், இரு நாட்கள் கண் விழித்து பார்த்த நிலையில், மற்ற நாட்கள் மயக்க நிலை ஏற்பட்டிருந்ததாகவும், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.



அவரது சிகிச்சை காலத்தில் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக மருத்துவர் தெரிவித்தனர். 



உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்