களுவாஞ்சிகுடி - குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை வீதியில், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
விபத்தில் காயமடைந்த இளைஞர்களை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.



