யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது!!

 

Tamil lk News

 யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2 அரைக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவோருக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த 27 வயதுடைய குறித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



குருநகர் பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.



அத்துடன் நல்லூர் அரசடிப்பகுதியில் 570 மில்லிக்கிராம் ஹெரோயினுடன்  விற்பனையில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



இவர்கள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலசார் தெரிவித்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்