கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள ஒரு பிரமாண்டமான சல்ஃபர் குகைக்குள், ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தப்படாத மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிலந்தி வலை சுமார் 106 சதுர மீட்டர் பரப்பளவுக்குள் விரிந்து காணப்பட்டுள்ளது.
இந்த வலை ஒற்றைச் சிலந்தியால் பின்னப்பட்டது அல்ல. இந்த அமைப்புக்குள் சுமார் 1,11,000 சிலந்திகள் கூட்டாக வாழ்கின்றன.
இது உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை என வர்ணிக்கப்படுகிறது.
குகைக்குள்ளே தனித்துவமான சூழலியல் அமைப்புகளும், உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை பாணியும் இந்த அமைப்பின் அடிப்படையாக திகழ்கின்றன.
இதன் மூலம், சிலந்திகளின் கூட்டம் உணவுத் தேடல் மற்றும் பாதுகாப்பில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வெளிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.



