அவசர தேவைகள்- வடக்கு மாகாணத்திற்கான பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

  வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 



ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கு இடையிலான Zoom  கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. 

Tamil lk News



இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதி இடையிலான கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 




இதன்போது தெரிவித்த  ஆளுநர் 




வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை விட மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 




மின்சாரம், குடிநீர் போன்றன முல்லைத்தீவில் மிகவும் பிரச்சினையாக உள்ளது. பாலங்கள் உடைந்திருக்கின்றன.



மன்னாரில் பிரதான வீதிகளில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. 



முல்லைத்தீவிற்கு தொலைத்தொடர்பு சேவை வழமைக்கு திரும்பவில்லை 




வடக்கில் 159 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும் நாளை அவர்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 



இதன்போது யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.




இதற்கு பதிலளித்த ஆநுநர்,



யாழ்ப்பாணம் பெரிதாப் பிரச்சினை இல்லை. கிளிநொச்சியில் இரணைமடுவில் நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 



இராணுவத்தினர் உதவிகளை வழங்கினார்களா என ஜனாதிபதி எழுப்பிய கேள்விக்கு இராணுவத்தினர் பூரண ஆதரவை வழங்கிவருவதாக ஆளுநர் தெரிவித்தார். 



வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி  இதன்போது ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்