19 ஆம் திகதி வரை நாட்டில் மழை! கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை..!!

  

Tamil lk News

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


கனமழை தணிந்திருந்தாலும், 4 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனமழையைத் தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்துள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


 வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமடைந்ததால், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.



மீகஹகிவுல பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மண் சரிவு ஏற்பட்டது. மண்சரிவுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்ட பின்னர் பதுளை மாவட்டத்தில் உள்ள பல குடும்பங்களை அந்தந்த பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.



 இதற்கிடையில், இரண்டாம் கடத்தின் கீழ் 5 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதேவேளை முதலாம் கட்டத்தின் 3 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்