தற்போதைய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் அதேவேளை எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் என்பதுடன் காற்றுச் சூழற்சியும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியல்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மாகாணங்களுக்கு கன மழை கிடைத்துவருகின்றது.
இந்தமழை 12ஆம் திகதிவரை கிடைக்கவுள்ளது.
ஏற்கனவே டிட்வாபுயலினால் கிடைக்கப்பெற்ற மழையினால் நீர் நிரம்பியுள்ளதால் தொடர்ந்தும் கிடைக்கும் மழைவீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட வாய்புள்ளது என குறிப்பிட்டார்.


