இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலின் பேரனர்த்தத்தினால் புகையிரதசேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இலங்கை ரயில்வே இன்று மாலை 16 பிரதான ரயில் சேவைகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை, மஹாவ, குருநாகல்,கணேவத்த மற்றும் பொல்கஹவெல வரை இயக்கப்படும்.
நாளை காலை 15 ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


