எரிபொருள் விநியோகத்தில் போக்குவரத்து சிக்கல் – சேவைகள் மட்டுப்படுத்த முடிவு

Tamil lk News


 இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஐக்கிய இலங்கை எரிபொருள் தாங்கி ஊர்திகளின்  உரிமையாளர்கள் சங்கம், இன்று முதல் தனது சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் சுசாந்த ஜயவர்தன விடுத்துள்ள அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர் முதல் நடைமுறையில் இருந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போதைய நிர்வாகம் சிதைத்துள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தங்களது கோரிக்கைகள் மற்றும் கவலைகள் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அதற்கு உரிய பதில் கிடைக்காததால் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இதன்படி, முழுமையான பணிப்புறக்கணிப்பாக இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே மட்டுமே எரிபொருள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடும். 

மீதமுள்ள வாகனங்கள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்