வவுனியாவில் பொலிசாருக்கு கிடைக்க தகவலுக்கு அமைய வவுனியா மாவட்டத்தில் இரண்டு இடத்தில் பொலிசாரினால் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளும் போது இருவரிடம் இருந்து காட்டுத் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 13-12-2022 அன்று மாலை மருதோடை, புளியங்குளம் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காட்டுத் துப்பாக்கியை கைப்பற்றியும் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபரான 38 வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளார்கள்.
மற்றும் ஒரு காட்டுத்துப்பாக்கியை செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதி வீடு ஒன்றிலிருந்தும் கைப்பற்றியதுடன் இந்த சம்பவம் தொடர்பான 30 வயதான சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துவுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்பு வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் என்று மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



