மகிழ்ச்சியான தகவல் இலங்கைக்கு வழங்கிய ஜப்பான்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட நிதியை பெற்றுக் கொள்வதற்கு கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கான கடன் மறு சீரமைப்பு திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்தாக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போது இருக்கும் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜப்பானின் பிரதிநிதிகள் உடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இதனை உறுதியளித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஜப்பானிய தூதராக பிரதிநிதிகள் குழு, நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மற்றும் நிதி அமைச்சர்களின் அதிகாரிகள் உட்பட இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

கடுமையான கட்டுப்பாடு சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடம் மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மிகக் கடுமையான கட்டுப்பாட்டினை சர்வதேச நாணய நிதியம் முன் வைத்துள்ளது.

அந்த வகையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலையில் இருக்கும் சீனா இந்த இணக்கப்பாட்டுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான இணக்கப்பாடும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியா கொள்கைவியல் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்