இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


tamillk news

இறுதி கட்ட யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று(16-12-2022)உத்தரவை பிறப்பித்துள்ளது.

இறுதிக்கட்டத்தின் யுத்தத்தின் போது தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதி கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பான மனு

மேலும் காணாமல் போனவர்களையும் முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகளின் போது, இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் அடுத்த தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே எஸ் ரத்ணவேல் தெரிவிக்கையில் காணாமல் போனமைக்கான காரணத்தை தெளிவூட்டுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரிஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு எங்கே கிளிக் செய்யுங்கள்


விளம்பரங்களுக்கு 
தொடர்பு கொள்ளுங்கள்
+9476 66 55 779
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்