நாளை நடைபெற உள்ள புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்


நாளைய தினம் நடைபெற இருக்கும் தரம் 5 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நாளைய தினம் நடைபெற இருக்கும் பரிட்சையில் முதலில் பகுதி 2 வினா பத்திரமே முதலில் வழங்கப்படுவதாகவும் இதற்கு முன்னர் பகுதி 1 வினா பத்திரமே வழங்கப்பட்டது இந்த வினா பத்திரம் நுண்ணறிவை கொண்டதாக காணப்படுவதால் மிகவும் கடினமானது என்பதால் பாட விடய தானங்கள் கொண்ட வினா பகுதி 2 பத்திரங்களை முதலில் வழங்குமாறு பெற்றோர்களினால் கூறப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்