வவுனியா மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த பேருந்து விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் வீதி ஊடாக செட்டிகுளம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றும் வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி செல்லும் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு ஓடியதில் தனியார் பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிய விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகிறார்கள்.



