சட்ட விரோதமாக படகில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த 303 பேர் காப்பாற்றப்பட்டு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களின் 151 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்ததற்கு இணங்க இன்று வியட்நாம் நேரம் படி பிற்பகல் 5 மணிக்கு விமான மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 303 நபர்களும் கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு பயணித்த வேலை படகு மூழ்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து ஜப்பானிய கொடியுடன் ஹீலியோஸ் லீடர் கப்பல் மூலமாக காப்பாற்றி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 151 பேர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து உலக மிள்குடியேற்ற ஸ்தாபனமான (ஐ. எம் .ஓ) அமைப்பின் அனுசரணையுடன் மீண்டும் நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



