லிட்ரோ நிறுவனம்: வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!





தற்போது போதிய அளவான எரிவாயுக்கள் கையிருப்பு இருப்பதாகவும் இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்

இந்த நிலையில் நாட்டுக்கு மாதாந்தம் 24 ஆயிரம் மெட்றிக்தொன் எரிவாயு தேவைப்படுகின்ற போதிலும் இந்த மாதம் மாத்திரம் 35,000 மெட்றிக்தொன் எரிவாயு கொள்ளளவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஜனவரி மாதத்துக்கு தேவையான எரிவாயு அளவினை விட மேலதிகமாக 27 ஆயிரம் மெட்றிக்தொன் எரிவாயுகளை கொள்ளளவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்தார்.

இருந்த போதும் மக்கள் அச்சமின்றி எரிவாயுகளை கொள்ளளவு செய்ய முடியும் எனவும் தெரிவித்த அவர் எரிவாயுக்கான விலை குறைவடையும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது என்று  தெரிவித்தார்.

ரஷ்யா உக்கிரன் யுத்தம் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படும் குளிர் காலநிலை காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்க சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்