யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் இளைஞர் ஒருவரே இவ்வாறு போதை ஊசி போட்டுக் கொண்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் எனவும் இவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த இளைஞன் போதைப் பொருள்களை ஊசி மூலமாக உடலில் செலுத்தியுள்ளதாகவும் அத்துடன் உயிரிழந்த இளைஞனுடன் மூவர் இணைந்து இந்த போதைப்பொருள் ஊசியை போட்டுக் கொண்டே மிகுதியாக இருந்த அனைத்து போதைப்பொருள் ஊசியையும் உயிரிழந்த நபருக்கே போட்டு உள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான போதை பொருள் ஊசி மூலமாக உடலில் செலுத்தியதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



