கர்ப்பிணி மாணவியை கடத்திக்கொண்டு போன இளைஞன்!


tamillk news

அனுராதாபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 15 வயது கர்ப்பிணி மாணவியை 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கடத்தி சென்றதற்காக 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி மாணவி நன்னடத்தை பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் கண்காணிப்பில் அனுராதாபுரம் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாறு கடத்தப்பட்ட மாணவி கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கர்ப்பிணியான மாணவி நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை அதிகார சபையின் பொறுப்பில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேலையில் சந்தேக நபரால் மாணவி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

Ads

இவ்வாறு கடத்தப்பட்ட மாணவியை விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு சந்தேக நபரான நண்பரின் தம்புள்ள பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு மாணவியை அழைத்துச் செல்லும் போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்