குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தாராறு காரணமாக தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷத்தை அருந்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சம்பவம்
இச் சம்பவமானது கம்பஹா லொலுவாகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மூவரும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீவிர சிகிச்சைக்காக 8 வயது மகளும் 5 வயது மகனும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்திய சாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அறிய வருவது இந்த குடும்பத்தின் தந்தையானவர் ஓடுபாசி தொழிலாளி ஆவார் இவர்களின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Tags:
srilanka



