வவுனியாவில் காதலிப்பதாக ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம்!

 


வவுனியாவில் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது வவுனியா உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை வைத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம் யுவதி வவுனியா பொலிஸ்சிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்குரிய இளைஞன் வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக தான் இந்த யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் இந்த இளம் யுவதியை வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியுள்ளதாவும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இந்த நிலையில் இருவரும் பகிர்ந்து கொண்ட படங்களை வைத்து பாதிக்கப்பட்ட யுவதியை அச்சுறுத்தி பணத்தைப் பெற்றவுடன் அந்தக் காணொளிகள் அனைத்தையும் தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளதாவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்