வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியா நிவாரண அரிசி மூட்டைகள்


வவுனியா பிரதேச செயலருக்கு பிரிவுக்கு உட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலக பிரிவுக்கு உட்பட்ட மதுராநகர்  கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் இந்தியாவால் வழங்கப்பட்டிருந்த நிவாரண அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அந்தப் பகுதியை சேர்ந்த மக்களால் (28.12.2022) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் அனைத்தும் பழுதடைந்தும் அதில் வண்டுக்கள் புழுக்கள் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அப்பகுதி மக்களின் கருத்துக்கள்

இவ்வாறு பதுக்கி  அரிசி யாருக்கும் பயனற்றதாக போய் இருக்கிறது என்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவதற்கே ஒன்றுமே இல்லாத காலகட்டத்தில் இவ்வாறான செயல்கள் மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுவதாகவும் மக்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தார்கள்.

மேலும் அப்பகுதி கிராம சேவகரே இந்த அரிசியை வழங்காமல் வைத்திருந்ததாகவும் கோபத்துடன் மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்துக்கு சென்று இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்