திருகோணமலை துறைமுகத்திற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 516 சுற்றுலா பயணிகளுடன் MV Silver Spirit கப்பல் அஷ்ரப் இறங்குதுறையை இன்று வந்தடைந்துள்ளது.
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு முதல் தடவையாக வந்திருக்கும் மிகப்பெரிய கப்பல் என்றும் துறைமுக அதிகார சபையின் முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் கப்பலால் துறைமுகத்திற்கு பல லட்சம்
இந்த சுற்றுலா பயணிகளின் கப்பல் வருகையால் பல லட்சம் லாபம் கிடைக்க உள்ளதாகவும் இந்த கப்பல் திரும்பி போகும் வரை துறைமுகத்திற்கு 21 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனவும் மேலும் முகாமையாளர் தெரிவித்தார்.
சுற்றுலா கப்பலில் வந்த பயணிகள் திருகோணமலை, சீகிரிய, தம்புள்ளை, அனுராதபுரம், பொலன்நறுவை ஆகிய இடங்களை ஒரு நாள் பயணத்தின் பின்னர் மீண்டும் நியூசிலாந்தை புறப்பட்டு செல்ல உள்ளது.
Tags:
srilanka



