இன்று அதிகாலை துருக்கியின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 5385 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கம் சரியாக இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்டடங்கள் இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மிக தீவிரமான மீட்பு பணியில் மீட்பு பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் போது மீண்டும் இரண்டாவது தடவையாக ரிக்டர் 7.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Tags:
world news



