துருக்கியில் நேற்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று பலியான எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
துருக்கியின் காஸியன்டெப் நகருக்கு அருகில் 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவினால் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் மூன்று முறை ஏற்பட்டுள்ளதாகவும்.
இதன்போது ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தில் 6217 கட்டடங்கள் இடிந்து விழுந்துவீந்துள்ள. அவற்றில் மக்கள் நிறைந்து வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அடங்கும்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வரும் நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியில் அரசாங்கமானது இந்த நிலநடுக்கத்தை தேசிய பேரடியாக அறிவித்து 7 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.



