13வது திருத்தம் குறித்த நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்: அறிவிக்காவிட்டால் மீண்டும் வீதிக்கிறங்கி போராடுவோம்-ஓமல்பே சோபித தேரர்

tamillk.com

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவித்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் 13வது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை (14) ஊத்தியபூர்வமாக அறிவிக்க வேண்டும் இல்லாவிடின் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேரர் குறிப்பிட்டதாவது

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் அமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு தமிழ் மக்கள் கோரவில்லை.

அதிகார பகிர்வு விவகாரத்தை தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் பிரவேசத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவை தேர்தல் காலத்தில் மாத்திரம் அதிகார பகிர்வு பரவலாக பேசப்படும் அதன் பின்னர் மறக்கப்படும். தங்களின் அரசியல் தேவைக்காக அதிகார பகிர்வு விவகாரத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் அறிவிக்க வேண்டும் மற்றும் சுவீகரிக்கப்படுள்ள காணிகளையும் விடுவிக்கப்பட வேண்டும்.

சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராளிகள் தொடர்பில் முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும்..

யுத்தமானது 14 வருடங்கள் நிறைவடைந்த உள்ள நிலையில் யுத்தத்தின் சுவடுகள் மற்றும் தாக்கங்கள் தொடர்வது முறையாற்றதாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவோம். அதேபோன்று 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசாங்கம் 13வது திருத்தம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முயற்சித்தால் மீண்டும் விதிக்கிறாங்கி அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்