2009இல் படையினர் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு முடிவுகட்டி விட்டனர்! கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு எமது படையினர் 2009இல் முடிவுகட்டி விட்டார்கள் என போரின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாகோட்டாபய ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில் போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம், பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்வதாகவும். மேலும் இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பிரபாகரன், அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோர் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டார்கள்.
பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி மனநோய் பிடித்தவர்கள் அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, சிலர் பிரபாகரனை உயிர்பிக்கவும் முயற்சிக்கின்றார். என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



