மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னரே மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி நேற்று (15.02.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 வீதத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தங்களுக்கு அமைய 60 அளவுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை 680 ரூபாய் மின் கட்டணம், 2560 ரூபாய்க்கு அதிகரிக்கப்படும்.
அதேபோன்று 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை 360 ரூபாய் மின் கட்டணம், 1300 ரூபாய் வரை அதிகரிக்கப்படும். இவை 261 வீதாத்தால் அதிகரிக்கப்படும்.
90 அலகு இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபாய் மின் கட்டணம், புதிய திருத்தங்களுக்கு அமைய 4430 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 200 அலகுகளுக்கு மேற்பட்ட மின் பாவனையை கொண்ட வீடுகளுக்கான மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



