மின் கட்டணம் அதிகரிப்பால் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

tamillk.com


மின் கட்டணத்தின் அதிகரிப்புக்கு அமைய உணவு பொருட்கள், தகவல் தொடர்பான சேவைகள். தொழில்துறை மற்றும் உற்பத்தி சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய கொத்து, சோறு ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

எனினும் இனிய சிற்றுண்டி வகைகள், அப்பம், பால் தேனீர், பால் அற்ற தேநீர் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

அதேபோன்று உணவு பொதியிடும் கடதாசி அவற்றின் விலை 5 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், shopping bag உள்ளிட்ட உற்பத்திகளை 15 முதல் 20 ரூபாய் வரை அதிகரிப்பதற்காக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பாடல் சேவைகளின் விலைகள் அதிகரிப்பு

 மின்கட்டணம் அதிகரிப்புக்கு அமைய தகவல் தொடர்பான சேவை தொழில்துறை மற்றும் உற்பத்தி சேவைகளின் விலைகள் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளரின் சங்கம் நிழல் பிரதி ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அடையாள அட்டையின் பிரதி 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் A-4 பிரதி ஒன்றின் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்