கடிதங்களை விநியோகம் செய்யும் போது போதை பொருளையும் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டில் தபால் ஊழியர் ஒருவர் 5,150 மில்லிகிரம் ஹெரோயினுடன் அங்குலானவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான தபால் ஊழியர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேக நபரிடம் சோதனைகளை மேற்கொண்ட போது ஹெராயின் போதை பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரான தபால் ஊழியரிடம் விசாரணை மேற்கொண்ட போது அரசாங்க உத்தியோகத்தால் கிடைக்கப்பெறும் சம்பளம் வாழ்வதற்கு போதுமானதா காணப்படாததால் மற்றும் கடனிலிருந்து விடுபடுவதற்காகவும் இவ்வாறு பணம் சம்பாதித்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



