துருக்கி உதவி கோரினால் வழங்க இலங்கை தயார்: வெளிவிவகார அமைச்சர்


துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காணப்படும் நிலையில் துருக்கிக்கு இலங்கை உதவி செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் துருக்கி உதவி கோரினால் அதனை வழங்குவதற்கு இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இராணுவ குழு ஒன்றை அனுப்புவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுவில் பொறியியல்ளாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய சுமார் 300 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்