அரசு ஊழியர்களுக்கு கொடுப்பனவு: வழங்கவுள்ளதாக அமைச்சர் வாக்குறுதி

tamillk.com


இந்த வருடத்தின் இறுதிக்குள் அரசு ஊழியர்கள் சில கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (20) கன்னோருவ தேசிய விவசாய தகவல் தொடர்பான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பின்னர் ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அதேபோன்று, இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஊதியம் இல்லாமல் விடுமுறையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த நாள்களில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க வேண்டும். என்று பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திருத்தங்களை செய்து அதனை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்