இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் எதிராக போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுப்புகாவலிலுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று(11) நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாண நகரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு நேற்று அழைப்புகள் விடுத்திருந்தார்.
யாழ்ப்பாண நகரில் சுதந்திர தின எதிராக போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இந்த தடை உத்தரவையும் மீறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டன.
இதை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் பெரும்பளவினர் குறிக்கப்பட்டு போராட்டத்தினை தடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. எனினும் போராட்டம் தொடர்ந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் (தமிழ்தேசிய மக்கள் முன்னணி) மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் உட்பட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.








