ஜனாதிபதி பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டிருந்த நிலையிலே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
jaffna



