ஜனாதிபதி ரணிலுக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்



 சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான அனுமதியைப் பெற்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், “அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.


சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பையும் மத்திய வங்கி ஆளுநரின் தொழில் நிபுணத்துவத்தையும் பாராட்டுவதாக அவரது ட்வீட் காட்டுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்