ஆங்கிலத்தில் சட்டக் கல்வியை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது (srilanka tamil news)

 

tamillk.com

ஆங்கில மொழியில் சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.


குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.


பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரமே குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.


இன்று (21) ஆங்கிலத்தில் சட்டக் கல்வியை நடாத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்ததை அடுத்து அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்