வவுனியாவில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: வெடுக்குநாறி மலை விக்கிரங்கள் உடைப்பு தொடர்பாக (vavuniya tamil news)

tamillk.com


வவுனியா வெடுக்குநாறி மலை அமைந்துள்ள ஆதி சிவன் ஆலய விக்ரங்கள் உடைக்கப்பட்டமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை செய்துள்ளார்கள்.

இன்று ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டமானது வவுனியாவின் கந்தசாமி ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டு கோபுரம் சந்தியை அடைந்து அங்கிருந்து கடைத்தெரு வீதி ஊடாக ஹொவரப்பொத்ததானை வீதி ஊடாக வருகை தந்து வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்துள்ளது.

வவுனியாவில் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதி லிங்கம் உடைக்கப்படு

 விக்கிரங்களும் உடைக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறான சம்பவத்தை செய்தவர்களை கண்டனம் தெரிவிப்பதோடு இந்த விசமச் செயல்களை செய்தவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறு குறித்த பேரணி இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீக தோல்வி, ஈழத் தமிழர்களை நீங்கள் வேரோடு அழித்துவிட நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், தமிழர்களின் மத சுதந்திரத்தை தடுக்க நினைக்காதே, தொல்பொருள் திணைக்காலமே வெளியேறு போன்ற சோசங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்றவர்கள் அரசாங்க அதிபர் பீ.ஏ. சரத்சந்திரனிடம் இந்த பேரணி தொடர்பாக ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினை  வடக்கிற்கான மேலதிக செயலாளருமான ஈ. இளங்கோவன் அவர்களிடம் கையடிக்கப்பட்டது.

இது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலதிக செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.











புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்