பேருவளை கடலில் நிலநடுக்கம்: “சுனாமி ஆபத்து இல்லை”

tamillk.com


பேருவளை பிரதேசத்தில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (மார்ச் 30) ​​மதியம் 1.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

tamillk.com


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்