வவுனியா செட்டிகுளம் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது!

tamillk.com


செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பழைய தொடர்ந்து நிலையத்திற்கு முன்பாக வீதியோரத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்ட சம்பவம் இன்று (09.04.2023) பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் சிலர் வந்து சீமைந்து கற்களை அடுக்கி புத்தர் சிலை ஒன்றை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பகுதி தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த ஒரு இடமாக காணப்பட்ட நிலையில் அத்தோடு இந்த பகுதியில் செட்டிகுளம் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவ்விடத்தில் சுமார் ஒரு அடி உயரத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்