( vavuniya tmail news-tamillk ) வவுனியாவில் பிரபல பாடசாலையான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை மர்ம நபர் அழைத்து சென்ற நிலையில், மாணவி தப்பி ஓடியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தெரிய வருவது நேற்று(15.05.2023) திங்கட்கிழமை குறித்த பாடசாலை நிறைவடைந்த நிலையிலும் மாணவியை பெற்றோர் அழைத்துச் செல்வதற்கு தாமதமாக இருந்ததால் பாடசாலையில் முன் பகுதியில் உள்ள இருக்கையில் குறித்த மாணவி அமர்ந்து இருந்துள்ளதாகவும்.
இந்த நிலையில் சிறிது தூரம் சென்ற மாணவி மீண்டும் பாடசாலையை நோக்கி அழுது கொண்டு வந்து போது வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு நபர் குறித்த மாணவியை பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் மாணவியை பெற்றோர்கள் வந்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து இன்று(16.05.2023) பாடசாலையில் பிரதி அதிபர் பெற்றோர்களை அழைத்து உரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விபரங்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



