( srilanka tamil news-tamillk ) போரினால் உயிர் நீத்த உங்கள் உறவுகளை உறவுகள் என்ற முறையில் மாத்திரம் தனியாக உங்கள் நினைவேந்தலை மேற்கொள்ளுங்கள் இதில் விடுதலைப்புலிகளையும் நினைவேந்துவதால் தான் பிரச்சனைகள் உருவாகிறது.
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்கு இலங்கை அரசு எந்தவிதமான தடைகளும் விதிக்கவில்லை அதேபோல் நினைவேந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலைகள் ஏற்படுகிறது அதேபோன்று தடைகளும் வருகின்றன.
போரினால் உயிரிழந்தவர்களை தனித்தனியாக உறவுகள் என்ற முறையில் உங்கள் நினைவேந்தர்களை மேற்கொள்ளுங்கள் என தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நிரலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இணைப்பதால் உங்கள் உறவுகளின் நினைவேந்தல்களையும் நீங்கள் தவறவிடாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.