பசுபிக் சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்



( srilanka tamil news-tamillk ) பசுபிக் சமுத்திரத்தில் இன்று 7.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.



இந்த நிலநடுக்கம் நியூ கலிடோனியாவின் ஜலண்ட்ஸ் தீவுகளுக்கு தென்கிழக்கில் 37 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா பூலோக அளவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.




இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது வனுவாட்டுவின் சில கரையோரங்களை மூன்று மீட்டர் அளவிலான சுனாமி அலைகளும், பி ஜி, கிரிபாட்டி., நியூசிலாந்து கரையோரங்களில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படக்கூடும் என அமெரிக்கா தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




அதேபோன்று பசுபிக் சமுத்திரத்தில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்