( vavuniya news-tamillk) இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) வவுனியா நகர சபை மைதானத்தில்உயிரிழந்த உறவுகளின் ஒழுங்கமைப்பு குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.
போரினால் உயிரிழந்தவர்களுக்கு மத இன மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மத்தலைவர்களும் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.
இதன் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நினைவாக மத்தலைவர்கள் இணைந்து பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் போது நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து மத்தலைவர்களும் வானில் புறாக்களை பறக்க விட்டனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம். பி நடராஜா, இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்டம் செயலாளர் என். கருணாநிதி மற்றும் சிவசேனை அமைப்பினர், வர்த்தக சங்கத் தலைவர், முச்சக்கர வண்டி சங்கத் தலைவர், கந்தசாமி கோயில் நிர்வாகத்தினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், நடைபாதை வியாபாரி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் உணர்வுகளையும் உயிர்களின் மதிப்பையும் அறிந்து பெரும்பாலான சிங்கள மக்கள் இந்த நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கவை.






