“அலி சப்ரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடு”: எம்.பி.க்கள் குழு சபாநாயகரிடம் கோரிக்கை

 

tamilk srilanka

ஏழு கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.



எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எம்.பி.யின் சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை சுங்கத்துறை 75 இலட்சம் அபராதம் விதித்துள்ள போதிலும், பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்திய இந்த நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்