உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் உக்கிர மோதல்

tamillk


ரஷ்யா படையினருக்கு எதிராக உக்கிர மோதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் தமது படையினர் 10 கிலோமீட்டர் வரை கட்டுப்படுத்தி விட்டதாகவும் உக்ரைனிய மூத்த இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சி ஹ்ரோமேவ் கூறினார்.

இன்று ஊடாவியாளர் சந்திப்பு இடம் பெற்றபோது மேற்கொண்டவாறு யுத்த களநிலவரங்களையும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

எங்கள் பிரதேசத்தை விடுவிப்பதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவதற்கு தயாராக உள்ளோம். 

யுத்தத்தின் முன்னேற்றம்

தங்கள் படையினர் சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள மாலா டோக்மாச்கா கிராமத்து அருகே 3 கிலோமீட்டர் படையினர் முன்னேறியதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் வெலிகா நோவோசில்காவுக்கு தெற்கு இருக்கும் கிராமத்திற்கு அருகே 7 கிலோமீட்டர் வரை முன்னேறியதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிகனை தாக்குதல்

உக்ரைனிய எரிகனைத் தாக்குதலின் போது குழந்தை ஒன்று கொல்லப்பட்டதாக ரஷ்யா செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பதிலடி

இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனிய நகரத்தில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளை தாக்கியுள்ளன.

இந்த தாக்குதலின் போது வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்ளூர் செய்திகள் வழங்கும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்