ஒடிசா தொடருந்து விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

 

inaian tamil news-tamillk


கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜுன் 2) சென்னை நோக்கி வந்த போது இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது. ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ரயில், தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். 



விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது. இந்த கோர சம்பவத்தில் 238க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான காரணம்

தொடருந்து  விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் கவாச் என்ற கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தொடருந்தின் முன்பக்கம் பொருத்தப்படும் இந்தக் கருவி, ஒரே தண்டவாளத்தில் எதிரே தொடருந்து வருவதையோ அல்லது தண்டவாளத்தில் இடையூறு இருப்பதை உணர்ந்தாலோ சுமார் 380 மீட்டருக்கு முன்னதாகவே தன்னிச்சையாக செயல்பட்டு என்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.




இந்த சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு சில வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்து நடைபெற்ற ஒடிசா மாநில வழித்தடத்தில் செயல்பாட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்