முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக சில முச்சக்கர வண்டி சங்கங்கள்

 

srilanka tamil news-tamillk

( srilanka tamil news-tamillk ) பெற்றோலின் விலையை குறைப்பது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.



இதன்படி, முச்சக்கரவண்டிக்கான கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாவாகவும் திருத்தியமைக்கப்படவுள்ளதாக முச்சக்கரவண்டி தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.



பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் தற்போது முதல் கிலோ மீட்டருக்கு 120 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாயும் வசூலிக்கின்றன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்