ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் புரமோ வீடியோ

cinema-tamillk


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிக பிரமாண்டமான ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


காவாலா 

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆன நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலான Hukum என்ற பாடல் வரும் 17ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Jailor song


இந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 


சூப்பர் ஸ்டாரின் கம்பீரமான குரல்

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் இடம்பெற்ற மாஸ் வசனம் இடம் பெற்றுள்ளது. அந்த வசனம் பின்வருமாறு,



ஏய் இங்க நான் தான் கிங், நான் வச்சதுதான் ரூல்ஸ். அதை நான் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன், அத கப்சிப்ன்னு கேட்டுகிட்டு ஃபாலோ பண்ணனும், அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ணுன, உன்ன கண்டதுண்டா வெட்டி கலைச்சு போட்டுடுவேன்’


இந்த வீடியோவில் ஸ்டைலாக ரஜினிகாந்த் துப்பாக்கியால் சுடும் காட்சி இருப்பதை பார்த்து ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கதாநாயகன் ரஜினிகாந்த் மற்றும் ஏனைய நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். 



இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்