அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார். "2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மறுசீரமைத்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
![]() |
21ஆம் திகதி உலக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்-Tamillk News |
அங்கு உலகத் தலைவர்கள் 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றும் மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்.
Tags:
srilanka