![]() |
இன்று நல்லூர் கந்தசுவாமி தீர்த்தத் திருவிழா Tamillk News |
Jaffna News - வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 25ம் திருவிழாவாகிய தீர்த்தத் திருவிழா இன்றையதினம் காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றது.
இன்று காலை வேதபாராயணங்கள் ஒலிக்க வசந்த மண்டபத்திலே முருகப்பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வீதியுலா வருகைதந்து தீர்த்தக் கேணியில் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று மாலை கொடியிறக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() |
இன்று நல்லூர் கந்தசுவாமி தீர்த்தத் திருவிழா Tamillk News |
Tags:
jaffna