![]() |
ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு! Tamillk News |
ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை கிரிவன்தல பகுதியில் இன்று(13) இரவு 7.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று பிரதான வீதியில் விழுந்துள்ளமையினால் அவ்வீதியினுடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த மரம் அவ்வீதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீதும் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் முறிந்து விழுந்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், ஸ்கூட்டி மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரத்தை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாகவே இடம்பெற்று வருகின்றன.
Tags:
Malaiyakam